ADDED : ஜூன் 13, 2025 09:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏழுகிணறு:ஏழுகிணறு, பேரக்ஸ் தெரு குடிசை பகுதியில் கஞ்சா எண்ணெய் விற்பதாக, ஏழுகிணறு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு, சந்தேகத்திற்கு இடமான வகையில் பைக்கில் வந்த இருவரை மடக்கினர்.
அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தால், போலீசார் அவர்களை சோதனையிட முயன்றனர். அப்போது, இருவரும் போலீசாரை தள்ளி விட்டு தப்பி ஓட முயன்றனர். இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்ததில், கஞ்சா எண்ணெய் இருப்பது தெரிய வந்தது.
விசாரணையில் ஏழுகிணறு, மின்ட் தெருவைச் சேர்ந்த வினோத்பாய், 25, சவுகார்பேட்டை, சுந்தரம் தெருவைச் சேர்ந்த சாகர்குமார், 23, என்பதும் தெரிய வந்தது. இருவரை போலீசார் கைது செய்து, 10 கிராம் கஞ்சா எண்ணெய், எடை இயந்திரம், பைக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.