/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.டி., ஊழியர்களுக்கு போதை மருந்து விற்ற இருவர் கைது
/
ஐ.டி., ஊழியர்களுக்கு போதை மருந்து விற்ற இருவர் கைது
ஐ.டி., ஊழியர்களுக்கு போதை மருந்து விற்ற இருவர் கைது
ஐ.டி., ஊழியர்களுக்கு போதை மருந்து விற்ற இருவர் கைது
ADDED : நவ 17, 2024 12:23 AM
தரமணி, வேளச்சேரி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஷாம்சுந்தர், 25.
தரமணி உதவி ஆணையரின் தனிப்படை போலீசார், மெத் ஆம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்த ஷாம்சுந்தரை நேற்றுமுன்தினம் பிடித்தனர்.
அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், அம்பத்துார் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ், 26 என்பவருடன்சேர்ந்து, போதைப் பொருள் விற்பனை செய்வது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அவர்களிடம் இருந்து, 30,000 ரூபாய் மதிப்புள்ள, 6 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதை பவுடர் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசார் கூறியதாவது:
கைது செய்யப்பட்டு உள்ள இருவரும் ஐ.டி., ஊழியர்கள்; 2020 முதல் நண்பர்கள். போதை பழக்கத்திற்கு அடிமையான இவர்கள், சக ஊழியர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்து அதிகம் சம்பாதிக்க முடிவு செய்தனர்.
பெங்களூரு, மும்பை சென்று குறைந்த விலைக்கு, மெத் ஆம்பெட்டமைன் வாங்கி வருவார்.
பின், இருவரும் சேர்ந்து, ஓ.எம்.ஆர் பகுதியில் உள்ள ஐ.டி., ஊழியர்களுக்கு, 1 கிராம் 3,500 முதல் 5,000 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தனர். இவர்களை போல் வேறு நபர்கள், போதைப் பொருள் விற்பனை செய்கிறார்களா என விசாரிக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.