/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சட்டவிரோத மது விற்பனை பள்ளிக்கரணையில் இருவர் கைது
/
சட்டவிரோத மது விற்பனை பள்ளிக்கரணையில் இருவர் கைது
ADDED : செப் 22, 2025 03:19 AM

பள்ளிக்கரணை: பள்ளிக்கரணை டாஸ்மாக் மதுக்கூடத்தில், சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில், அரசு நிர்ணயித்த நேரத்தை தவிர்த்து, சட்டவிரோதமாக கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு மது பாட்டில் விற்பனை நடந்தது.
இதுகுறித்து தகவலறிந்த, பள்ளிக்கரணை காவல் மாவட்ட துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார், அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது, சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட, மதுக்கூட உரிமையாளர் சூர்யா, 27, விற்பனையாளர் பிரவீன், 21, ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 63 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வருகிற 3ம் தேதி வரை சிறையில் அடைக்க, நேற்று முன்தினம் நீதிபதி உத்தரவிட்டார்.