/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லாட்டரி சீட்டு விற்ற இருவர் சிக்கினர்
/
லாட்டரி சீட்டு விற்ற இருவர் சிக்கினர்
ADDED : டிச 30, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வண்ணாரப்பேட்டை: வண்ணாரப்பேட்டை, கம்பெனி சத்திரம் தெரு சந்திப்பில், வண்ணாரப்பேட்டை போலீசார் நேற்று, ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஜாகிர்பாஷா, 49, நாராயணன், 53, ஆகியோர் சிக்கினர். அவர்களை நேற்று கைது செய்த போலீசார், 25,000 ரூபாய், ஐந்து மொபைல் போன்கள் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.