/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெத் ஆம்பெட்டமைன் விற்ற இருவர் கைது
/
மெத் ஆம்பெட்டமைன் விற்ற இருவர் கைது
ADDED : டிச 08, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரவாயல், மதுரவாயல் மேம்பாலத்தின் கீழ் நேற்று முன்தினம் இரவு, போலீசார் சோதனை நடத்தினர்.
அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற, ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சோமங்கர், 37 என்பவரை விசாரித்தனர்.
சோதனையில், அவரிடம் 2 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் மற்றும் நான்கு ஊசிகள் இருந்தன. இவர் மதுரவாயல் அடுத்த வானகரத்தில் தங்கி போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதேபோல், ராமாபுரம் திருமலை நகர் பகுதியில் போதை பொருள் விற்பனை செய்த பல்லாவரத்தை சேர்ந்த விக்னேஷ், 25 என்பவரை ராமாபுரம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 1.7 கிராம் மெத் ஆம்பெட்டமைன் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.