/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை மாத்திரை, கஞ்சா பதுக்கி விற்ற இருவர் கைது
/
போதை மாத்திரை, கஞ்சா பதுக்கி விற்ற இருவர் கைது
ADDED : மார் 22, 2025 12:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்துப்பட்டு, சேத்துப்பட்டு, பிருந்தாவனம் நகரில், நேற்றுமுன்தினம் இரவு, சந்தேகப்படும்படியாக நின்றுக் கொண்டிருந்த, தி.நகரைச் சேர்ந்த பவின், 22, கோவிலம்பாக்கத்தை சேர்ந்த ஸ்டாலின், 39 இருவரையும் பிடித்து விசாரித்தபோது, போதைப் பொருள் விற்பது தெரிந்தது.
அவர்களிடம் இருந்து, 700 வலி நிவாரண மாத்திரைகள், 1.2 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என , போலீசார் தெரிவித்தனர்.