ADDED : ஏப் 09, 2025 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, ஆயிரம்விளக்கு, வேலஸ் கார்டன், 3வது தெருவைச் சேர்ந்தவர் ஆசிப் அலி, 45. கடந்த, 26ம் தேதி, வேலஸ் கார்டன், 2வது தெரு வழியாக நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் அவர் கையில் வைத்திருந்த, ஐ போனை பறித்துச் சென்றனர்.
சம்பவம் குறித்து, ஆயிரம்விளக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த டில்லிபாபு, 27, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த மணிகண்டன், 33 ஆகியோர் மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
நேற்று இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஐபோனை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.

