/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணிடம் போன் பறிப்பு இருவர் கைது
/
பெண்ணிடம் போன் பறிப்பு இருவர் கைது
ADDED : மே 15, 2025 12:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராயபுரம், ராயபுரம், சூரிய நாராயணன் தெருவைச் சேர்ந்தவர் பெனாசிர், 35; தள்ளுவண்டியில் சிக்கன் பக்கோடா கடை வைத்துள்ளார்.
கடந்த 12ம் தேதி இரவு, பெனாசிர் வியாபாரம் முடித்து, வீட்டிற்கு நடந்து சென்றபோது பைக்கில் வந்த இருவர், அவரது கையில் இருந்த மொபைல் போனை பறித்து தப்பினர்.
இது குறித்து ராயபுரம் போலீசார் விசாரித்து, எர்ணாவூர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த மணிகண்டன், 23, சேட்டு, 21, ஆகியோரை கைது செய்தனர்.