/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
167 போதை மாத்திரை பதுக்கிய இருவர் கைது
/
167 போதை மாத்திரை பதுக்கிய இருவர் கைது
ADDED : நவ 15, 2024 12:30 AM
அயனாவரம், பெங்களூருவில் இருந்து போதை பொருட்களை கடத்தி, அயனாவரத்தில் விற்ற பெரம்பூரைச் சேர்ந்த மார்டின் ஜோஸ்வா, 31, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
அதேபோல், அவரது கூட்டாளியான கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சூர்யா, 24, என்பவரையும் கைது செய்து, போதை ஸ்டாம்ப் உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இவர்களது தகவல்படி, 'எம்.டி.எம்.ஏ.,' எனும் போதை மாத்திரை வைத்திருந்த, பாடியைச் சேர்ந்த ராஜேஷ், 36, தனியார் நிறுவன ஊழியர் பீரதீப், 38, ஆகிய இருவரையும் நேற்று, அயனாவரம் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, 30 கிராம் ஓ.ஜி., கஞ்சா, 1.67 லட்சம் ரூபாய் மதிப்பு எம்.டி.எம்.ஏ., எனும் 167 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்தோரை, போலீசார் தேடி வருகின்றனர்.