/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வண்ணாரப்பேட்டையில் டூ - வீலர் திருடிய இருவர் கைது
/
வண்ணாரப்பேட்டையில் டூ - வீலர் திருடிய இருவர் கைது
ADDED : ஆக 10, 2025 12:16 AM

வண்ணாரப்பேட்டை,வண்ணாரப்பேட்டையில் டூ - வீலர் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 64. இவர், அதே பகுதியில் காயலாங்கடை நடத்தி வருகிறார். கடந்த 2ம் தேதி, வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த, இவரது 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டர் திருடு போனது. இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்தனர்.
இதில், பழைய வண்ணாரப்பேட்டை, என்.என்.கார்டன் 8வது தெருவைச் சேர்ந்த கார்த்திக் ராஜா, 25, விக்ரம், 22, ஆகியோர், சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து, 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், கார்த்திக்ராஜா, அவரது நண்பர் விக்ரமுடன் சேர்ந்து, வண்ணாரப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. கார்த்திக்ராஜா மீது ஏழுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.