/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லாரியில் பேட்டரி திருடிய இருவர் கைது
/
லாரியில் பேட்டரி திருடிய இருவர் கைது
ADDED : ஏப் 24, 2025 12:18 AM

மாதவரம்,மாதவரம் மஞ்சம்பாக்கம் அடுத்த சுங்கச்சாவடி பகுதியில் மாத்துாரை சேர்ந்த ஆதிமூலம், 59 என்பவர் லாரி டிங்கரிங் ஷாப் நடத்தி வருகிறார். இவரது 'ஷெட்'டுக்கு வந்த லாரிகளில் பேட்டரி திருடு போனது. இதுகுறித்து கடந்த 20ம் தேதி மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் ஆதிமூலம் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த நிலையில், மாதவரம் பகுதியில் பழைய இரும்பு சாமான் வாங்கும் கடையில் சந்தேகப்படும்படி நின்ற இருவரை பிடித்து விசாரித்த போது அவர்கள் பேட்டரி திருடர்கள் என தெரிந்தது.
இது தொடர்பாக திருநெல்வேலியை சேர்ந்த ஆனந்த்ராஜ், 22 மற்றும் துாத்துக்குடியை சேர்ந்த பிரபு, 22 ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், நான்கு பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.