ADDED : மார் 30, 2025 12:25 AM
பெரும்பாக்கம்,
பெரும்பாக்கத்தை சேர்ந்த வினோத்குமார், 34, பாபு, 50, விசாம்பரம், 76, ஆகியோரின் ஐந்து மாடுகள், இந்திரா பிரியதர்ஷினி நகரில், நேற்று அதிகாலை 3:00 மணிக்கு படுத்திருந்தன.
அப்போது, அங்கு டாட்டா ஏஸ் வாகனத்தில் வந்த இரண்டு பேர், படுத்திருந்த மாடுகளை பிடித்து, வாகனத்தில் ஏற்றினர்.
இதை பார்த்த வினோத்குமார், பெரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாடு திருடிய இருவரையும் கைது செய்து, வாகனத்தை கைப்பற்றி, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
இதில், அவர்கள் போரூர், ஆலப்பாக்கத்தை சேர்ந்த முரளி, 26, விமல், 24, என தெரிந்தது. மேலும், மாட்டு உரிமையாளர்கள் கொடுத்த புகாரின்படி, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், இவர்கள் வேறு எங்காவது மாடு திருடினரா என, விசாரித்து வருகின்றனர்.