/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சொத்து தகராறில் தம்பதியை மிரட்டிய இருவர் கைது
/
சொத்து தகராறில் தம்பதியை மிரட்டிய இருவர் கைது
ADDED : ஜூலை 03, 2025 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாண்டிபஜார், தி.நகர், ராமன் தெருவைச் சேர்ந்தவர் குப்புசாமி, 62. இவரது மனைவி நீலாவிற்கு, அவரது சகோதரிக்கும் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள பூர்விக சொத்து தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது.
கடந்த 30ம் தேதி குப்புசாமி வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த அவரது மனைவியின் தங்கை மகன் தினேஷ் புாபு உட்பட இருவர், குப்புசாமி மற்றும் நீலாவை அவதுாறாக பேசி கத்தியை காட்டி, கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.
இதுகுறித்து பாண்டி பஜார் போலீசார் விசாரித்து, நந்தனத்தைச் சேர்ந்த தினேஷ் பாபு, 20, தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரோகன், 21, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.