/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பைக் திருட முயன்று ஓட்டுநரிடம் பணம் பறித்து தப்பிய இருவர் கைது
/
பைக் திருட முயன்று ஓட்டுநரிடம் பணம் பறித்து தப்பிய இருவர் கைது
பைக் திருட முயன்று ஓட்டுநரிடம் பணம் பறித்து தப்பிய இருவர் கைது
பைக் திருட முயன்று ஓட்டுநரிடம் பணம் பறித்து தப்பிய இருவர் கைது
ADDED : மே 29, 2025 11:47 PM
கீழ்ப்பாக்கம் :விழுப்புரம், விக்கிரவாண்டியை சேர்ந்தவர் அன்பு, 32. இவர், சென்னை, சேத்துப்பட்டில் தங்கி, அயனாவரம் பகுதியில் கார் ஓட்டுநராக பணிபுரிகிறார்.
நேற்று காலை, கீழ்ப்பாக்கம், மெக்னிக்கல் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில், அன்பு தன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.
சிறிது நேரத்திற்கு பின் வந்து பார்த்த போது, இருசக்கர வாகனத்தை, அடையாளம் தெரியாத இருவர் திருட முயன்றனர்.
இதுகுறித்து, அன்பு கேட்டபோது, இருவரும் தகாத வார்த்தையால் பேசி, அன்புவிடம் வாக்குவாதம் செய்தனர்.
பின், கத்தியை காட்டி மிரட்டி, அன்புவிடம் 700 ரூபாய் பணத்தை பறித்து, அவர்களை பிடிக்க முயன்ற பொதுமக்களையும் மிரட்டி தப்பினர். கீழ்ப்பாக்கம் போலீசில் அன்பு புகார் அளித்தார்.
போலீார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, நேற்று மாலையே சென்னையில் பதுங்கியிருந்த தஞ்சாவூரை சேர்ந்த கவுரிசங்கர், 23, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வீரமணிகண்டன், 30, இருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்த போலீசார், நேற்று இரவு அவர்களை சிறையில் அடைத்தனர்.