/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நோயாளிகளிடம் மோசடி மருத்துவமனையில் இருவர் கைது
/
நோயாளிகளிடம் மோசடி மருத்துவமனையில் இருவர் கைது
ADDED : டிச 13, 2024 12:00 AM

சென்னை, சென்னை, சென்ட்ரல் பகுதியில் உள்ள, ராஜிவ் காந்தி அரசு மருத்துவனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் வந்து செல்கின்றனர்.
வெளி மாநிலங்களைச் சேர்ந்தோர் உள் நோயாளிகளாக சேர, 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவர்கள் சிறப்பு வார்டுகளில் தங்கி சிகிச்சை பெறவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கட்டணம் வசூலிக்க, அட்மிஷன் கவுன்டரில் சுழற்சி முறையில் ஊழியர்கள் பணியில் இருப்பர்.
அவர்கள் நோயாளிகள் செலுத்தும் கட்டணத்தில் மோசடி, அவர்களின் உறவினர்களை தங்க வைக்க லஞ்சம் செய்து வருவதாக புகார்கள் வந்தன. இதுகுறித்து, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர், அதே மருத்துவமனை வளாகத்தில் உள்ள, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீசார், அட்மிஷன் கவுன்டர் அருகே உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். தொடர் விசாரணையில், ரெக்கார்டு கிளார்க் நிலையில் பணிபுரிந்து வரும், புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த குபேரன், 50, மற்றும் திருவள்ளூர் மாவட்டம், ஆவடியைச் சேர்ந்த கலைமகள், 44, ஆகியோர் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு உடந்தையாக இருந்த மேலும், நான்கு ஊழியர்களிடம் விசாரணை நடக்கிறது.

