/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ. 2.9 லட்சம் நுாதன மோசடி டிரைவர் உட்பட இருவர் கைது
/
ரூ. 2.9 லட்சம் நுாதன மோசடி டிரைவர் உட்பட இருவர் கைது
ரூ. 2.9 லட்சம் நுாதன மோசடி டிரைவர் உட்பட இருவர் கைது
ரூ. 2.9 லட்சம் நுாதன மோசடி டிரைவர் உட்பட இருவர் கைது
ADDED : ஏப் 02, 2025 12:20 AM

சென்னை,
அண்ணாசாலையில் இயங்கி வரும், வி.எஸ்.டி., தனியார் கார் விற்பனை நிலையத்தில் மேலாளராக இருப்பவர் குமரன், 36. அவர், அண்ணாசாலை காவல் நிலையத்தில் அளித்த புகார்:
எங்கள் நிறுவனத்தில் திரு.வி.க.,நகரைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர், கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.
அவர், நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் கிரெடிட் கார்டு பயன்படுத்தி, நுங்கம்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்கில், 52 முறை பெட்ரோல் போட்டுள்ளார்.
ஆனால் பெட்ரோல் போடமலேயே போட்டது போன்று, 2.9 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, புகாரில் கூறப்பட்டு இருந்தது.
அண்ணா சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
பெட்ரோல் பங்கு காசாளர் கோவிந்தா, 32 என்பவர், கிரெடிட் கார்டை பயன்படுத்தியதுபோல், ஸ்வைப் செய்துவிட்டு, பெட்ரோல் போடாமல் அதற்கான தொகையை, பணமாக ஆனந்தனிடம் கொடுத்துள்ளார். இதற்காக கமிஷன் தொகையை வாங்கியது தெரியவந்தது.
நேற்று ஆனந்தன், 33, கோவிந்தா, 32 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 20,000 ரூபாய், இரு மொபைல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
***

