/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை இரு முதியோருக்கு 'ஆயுள்'
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை இரு முதியோருக்கு 'ஆயுள்'
சிறுமிக்கு பாலியல் தொல்லை இரு முதியோருக்கு 'ஆயுள்'
சிறுமிக்கு பாலியல் தொல்லை இரு முதியோருக்கு 'ஆயுள்'
ADDED : நவ 21, 2025 04:41 AM

செங்கல்பட்டு: சென்னை, சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பெற்றோருடன் 6 வயது சிறுமி வசித்து வந்தார். தந்தையை பிரிந்து, தாய் வேறு திருமணம் செய்துகொண்டதால் தாத்தா, பாட்டி வீட்டில் சிறுமி வசித்து வருகிறார்.
கடந்த 2022ம் ஆண்டு, சிறுமி தெருவில் விளையாடிய போது, மாவுக்காரர் ராஜேந்திரன், 63, வாட்ச்காரர் தேவராஜ், 60, ஆகியோர், சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதுகுறித்து சிறுமி தன் தாத்தாவிடம் கூற, சோமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதியோர் இருவரையும், 'போக்சோ' சட்டத்தி ல் கைது செ ய்து, சிறையில் அடை த்தனர். இவ் வழக்கு விசாரணை, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமாபானு முன்னிலையில் நடந்து வந்தது.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் ராஜேந்திரன், தேவராஜ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை யும், தலா 2,000 ரூபாய் அபராதம் விதித்தும், கட்டத்தவறினால், ஓராண் டு சிறை தண்டனையும் விதித்து, நீதிபதி நசீமாபானு, நேற்று தீர்ப்பளித்தார்.
மேலும், இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக, 5 லட்சம் ரூபாய் வழங்க, அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

