UPDATED : செப் 19, 2026 11:17 PM
ADDED : செப் 19, 2026 10:13 PM
அ நிறம் | அளவு
கொடுங்கையூர்:கொடுங்கையூர் திருவள்ளுவர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் என்ற விக்ரம், 32.
இவர் மீது 20 குற்ற வழக்குகள் உள்ளன. வியாசர்பாடி, எம்.கே.பி. நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் அஜிசுல்லா, 28, இவர்கள் மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த காரணத்தினால், நீதிமன்றம் இவர்களை பிடிக்க பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதனையடுத்து நேற்று இருவரையும் கைது செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
