தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/கஞ்சா கடத்திய இருவர் சிக்கினர்

கஞ்சா கடத்திய இருவர் சிக்கினர்

கஞ்சா கடத்திய இருவர் சிக்கினர்


ADDED : மார் 01, 2024 12:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2024 12:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, நியூ ஆவடி சாலையில் போலீசார் நேற்று, வாகன சோதனையில் ஈடுபட்ட போது, ஒரு பைக்கை மடக்கி சோதித்தனர். அதில் இருந்த 'பார்சல்'களில் 8 கிலோ கஞ்சா இருந்தது.

அதை பறிமுதல் செய்து, பைக் ஓட்டி வந்த வாலிபரையும் கைது செய்து, தலைமைச் செயலக காலனி போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இதில் அவர், திருச்சி மாவட்டம், திருச்சி ராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன்,32, என்பதும், அசாம் மாநிலத்தில் இருந்து வாங்கி வந்து, விற்றதும் தெரிந்தது. நேற்று, அவரை சிறையில் அடைத்தனர்.

 இதேபோல், ஓட்டேரியில், ஆட்டோவில் கஞ்சா விற்ற அயனாவரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் இளவரசன், 22, என்பவரை, ஓட்டேரி போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us