/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிவுநீர் குழாய் உடைந்து பள்ளம் விரிசல் விட்டு இரு வீடுகள் சேதம்
/
கழிவுநீர் குழாய் உடைந்து பள்ளம் விரிசல் விட்டு இரு வீடுகள் சேதம்
கழிவுநீர் குழாய் உடைந்து பள்ளம் விரிசல் விட்டு இரு வீடுகள் சேதம்
கழிவுநீர் குழாய் உடைந்து பள்ளம் விரிசல் விட்டு இரு வீடுகள் சேதம்
ADDED : மார் 15, 2024 12:22 AM

வடபழனி வடபழனியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கழிவுநீர் குழாய் உடைந்து ஏற்பட்ட பள்ளத்தை, குடிநீர் வாரியம் சீர் செய்யாததால், இரு வீடுகள் உடைந்து விரிசல் ஏற்பட்டு, சரிந்து விழும் நிலையில் உள்ளன.
கோடம்பாக்கம் மண்டலம் வடபழனி, 130வது வார்டில் அழகிரி நகர், 6வது குறுக்குத் தெரு உள்ளது. இது மிகவும் குறுகிய சந்தாக உள்ளது. இங்கு, 10க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த குறுகிய சந்தின் கீழ், கழிவுநீர் குழாய் செல்கிறது. இந்த குழாய் வழியாக அப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், அழகிரி நகர் 6வது தெருவில் உள்ள கழிவுநீர் உந்து நிலையத்திற்குச் செல்கிறது. கடந்த ஜனவரி மாதம், 6வது குறுக்கு தெருவில் பள்ளம் ஏற்பட்டு, அவ்வழியாக செல்லும் கழிவுநீர் குழாய் உடைந்து, கழிவுநீர் வீடுகளில் புகுந்தது.
இதுகுறித்து புகார் அளித்தும், குடிநீர் வாரியம் உரிய நடவடிக்கை எடுக்காததால், மண் சரிந்து பள்ளம் ஏற்பட்டது. பள்ளத்தின் அருகே இருந்த இரு வீடுகள் உள்வாங்கின.
இதையடுத்து, மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு, அங்கிருந்த நபர்களை கடந்த பிப்., மாதம் அப்புறப்படுத்தினர்.
இதில், ஒரு வீட்டில் முழுமையாக விரிசல் விழுந்துள்ளது. அதன் அருகே உள்ள கீழ் தளம், முதல் மற்றும் இரண்டாம் தளம் கொண்ட வீடுகளில் விரிசல் விட்டு, எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளன.
இதுகுறித்து குடிநீர் வாரியம், முதல்வர் தனிப் பிரிவில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீர் வாரியம் கழிவுநீர் குழாய் கிடைக்கவில்லை என, அலட்சியமாக பதில் அளித்து வந்துள்ளது.
இதனால், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் வாழ்நாள் உழைப்பில் கட்டிய வீடுகள், இடித்து தள்ளும் நிலையில் உள்ளன.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பி.நாகம்மாள், 64, என்பவர் கூறியதாவது:
இந்த தெருவில் செல்லும் கழிவுநீர் குழாய் உடைந்து, மண் சரிந்து பள்ளம் ஏற்பட்டது. குடிநீர் வாரியம், மாநகராட்சி, முதல்வர் தனிப் பிரிவு என, புகார் அளித்தும், யாரும் கண்டுகொள்ளவில்லை.
அப்போதே, அவர்கள் நடவடிக்கை எடுத்து குழாயை சீர் செய்திருந்தால், எங்கள் வீடுகள் உடைந்திருக்காது. கடந்த ஒரு மாதமாக, 10,000 ரூபாய் வாடகையில் வீடு எடுத்து தங்கியுள்ளோம். இனி என்ன செய்வது எனத் தெரியவில்லை. மீண்டும் இதுபோல் வீடு கட்ட பணமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

