/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரசு மருத்துவமனை ஊழியரை தாக்கி வழிப்பறி: இருவருக்கு சிறை
/
அரசு மருத்துவமனை ஊழியரை தாக்கி வழிப்பறி: இருவருக்கு சிறை
அரசு மருத்துவமனை ஊழியரை தாக்கி வழிப்பறி: இருவருக்கு சிறை
அரசு மருத்துவமனை ஊழியரை தாக்கி வழிப்பறி: இருவருக்கு சிறை
UPDATED : மார் 21, 2025 12:32 AM
ADDED : மார் 21, 2025 12:28 AM
சென்னை, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், 'வார்டு பாய்' ஆக பணிபுரிந்தவர் முருகன். இவர், மரணமடைந்த தன் நண்பர் ஆகாஷின் தாயை பார்க்க, 2019, பிப்., 3ல், கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
நண்பரிடம் துக்கம் விசாரித்து, மருத்துவமனை வளாகத்தில் நடந்து வந்தபோது, சேத்துப்பட்டைச் சேர்ந்த கோகுல் என்ற கோகுலகிருஷ்ணன், 32, கீழ்ப்பாக்கம் லாரன்ஸ், 32, ஆகியோர், செங்கற்களால் முருகனின் பின்பக்கம் தலையில் தாக்கியுள்ளனர்.
அவரை, அங்கிருந்து ஒதுக்குப்புறமான இடத்துக்கு துாக்கி சென்று, முருகன் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் செயின், மொபைல் போன் ஆகியவற்றை, இருவரும் பறித்து சென்று தப்பியோடினர்.
படுகாயமடைந்த முருகன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த சம்பவம் தொடர்பாக, முருகன் புகாரின்படி, கொலை முயற்சி, வழிப்பறி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த கீழ்ப்பாக்கம் போலீசார், கோகுல், லாரன்ஸ் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, சென்னை மாவட்ட 18வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி முன் நடந்து வந்தது. போலீசார் சார்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் என்.ஜெய்சங்கர் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கோகுல் மற்றும் லாரன்ஸ் ஆகியோருக்கு எதிராக, வழிப்பறி மற்றும் வழிப்பறி செய்யும் நோக்கில் கொடுங்காயத்தை ஏற்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே, இருவருக்கும் எந்த கருணையும் காட்ட முடியாது. இருவருக்கும் தலா 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 7,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.