/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருமண மண்டப கூரை பணி மின்சாரம் பாய்ந்து இருவர் பலி
/
திருமண மண்டப கூரை பணி மின்சாரம் பாய்ந்து இருவர் பலி
திருமண மண்டப கூரை பணி மின்சாரம் பாய்ந்து இருவர் பலி
திருமண மண்டப கூரை பணி மின்சாரம் பாய்ந்து இருவர் பலி
ADDED : அக் 30, 2025 03:57 AM
மேல்மருவத்துார்: திருமண மண்டபத்திற்கு கூரை அமைக்கும் பணியின்போது, மின்சாரம் பாய்ந்து தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சாந்தா ராவ், 49. ரமணா, 62. இவர்கள், மேல்மருவத்துார் - வந்தவாசி செல்லும் சாலையோரம் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு, கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். நேற்று காலை 10:00 மணியளவில் பணியில் இருந்தபோது, மண்டபத்தின் எதிரே செல்லும் மின் கம்பியில், எதிர்பாராத விதமாக இரும்பு கம்பி உரசியுள்ளது. இதிலிருந்து மின்சாரம் பாய்ந்து, இருவரும் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளனர்.
அங்கிருந்தோர் அவர்களை மீட்டு, மேல்மருவத்துார் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில், அவர்கள் இறந்தது தெரிய வந்தது. மேல்மருவத்துார் போலீசார் விசாரிக்கின்ற னர்.