/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.500 பந்தயம் கட்டி கொசஸ்தலை ஆற்றில் நீந்திய கூலித்தொழிலாளர்கள் இருவர் மாயம்

ADDED : அக் 27, 2025 03:06 AM

மணலிபுதுநகர்: பந்தய பணமான 500 ரூபாய்க்காக, பெருக்கெடுத்தோடும் கொசஸ்தலை ஆற்றில் நீந்தி மறுகரைக்கு செல்ல முயன்ற இருவர், காட்டாற்று வெள்ளத்தில் மாயமாகினர்.
மாதவரம், பர்மா காலனி 3வது தெருவைச் சேர்ந்தவர் ராஜா, 52, எருக்கஞ்சேரியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 45, இவர்கள் உட்பட ஐந்து பேர், நாப்பாளையத்தில் உள்ள தனியார் கிடங்கில் கூலி வேலை பார்த்து வந்துள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை நண்பர்கள் ஐந்து பேரும் சேர்ந்து, நாப்பாளையம் - கொசஸ்தலை ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அங்கு மது அருந்திய நிலையில், பூண்டி ஏரி நீர் திறப்பால் ஆர்ப்பரிக்கும் கொசஸ்தலை ஆற்றில் நீந்தி மறுகரைக்கு சென்றால், 500 ரூபாய் தருவதாக, நண்பர்களுக்குள் பந்தயம் கட்டியுள்ளனர்.
அதன்படி, மது போதையில் இருந்த ராஜா மற்றும் கிருஷ்ணமூர்த்தி, பந்தய பணத்திற்கு ஆசைப்பட்டு, கொசஸ்தலை ஆற்றில் நீந்தியுள்ளனர். பாதி துாரம் சென்றபோது, காட்டாற்று வெள்ளத்தில் நீந்த முடியாமல் இருவரும் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகினர்.
மணலி தீயணைப்பு வீரர்கள் இரண்டு ரப்பர் படகுகளுடன், நேற்று மாலை வரை தேடியும் இருவரும் கிடைக்கவில்லை.