/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையில் மெகா பள்ளம் அம்பத்துாரில் தொடர்கதை
/
சாலையில் மெகா பள்ளம் அம்பத்துாரில் தொடர்கதை
ADDED : அக் 27, 2025 03:07 AM

பாடி: சாலையில், திடீரென மெகா பள்ளங்கள் ஏற்படுவது, அம்பத்துாரில் தொடர்கதையாகி உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர்.
அம்பத்துார், மேனாம்பேடு, கருக்கு பிரதான சாலையில், கடந்த ஆக., 17ம் தேதி, செப்., 1ம் தேதி, அக்., 2ம் தேதி மற்றும் நேற்று முன்தினம் என, நான்கு முறை திடீர் பள்ளம் விழுந்தது. இது வாகன ஓட்டிகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், பாடி, குமரன் நகர், மகாத்மா காந்தி சாலையில், நேற்று திடீரென சாலை உள்வாங்கி, மூன்று அடி அகலம் மற்றும் ஐந்து அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.
அந்நேரம் அவ்வழியாக வாகனங்கள் செல்லாததால், அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டது.
தகவலறிந்து சென்ற, மாநகராட்சி ஊழியர்கள், பள்ளத்தில் மணல் கலவையை கொட்டி, சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த மெட்ரோ பணிகளால், தற்போது மண் அரிப்பு ஏற்பட்டு சாலை உள்வாங்கியதாக மண்டல அதிகாரிகள் தெரிவித்தனர்.
அம்பத்துார் சாலைகளில் திடீர் பள்ளம் ஏற்படுவது, தொடர்கதையாகி உள்ளதால், வாகன ஓட்டிகள் பீதியில் உள்ளனர்.

