/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.7 லட்சம் திருடிய இருவர் 7 ஆண்டுக்கு பின் சிக்கினர்
/
ரூ.7 லட்சம் திருடிய இருவர் 7 ஆண்டுக்கு பின் சிக்கினர்
ரூ.7 லட்சம் திருடிய இருவர் 7 ஆண்டுக்கு பின் சிக்கினர்
ரூ.7 லட்சம் திருடிய இருவர் 7 ஆண்டுக்கு பின் சிக்கினர்
ADDED : ஆக 03, 2025 12:16 AM

மதுரவாயல், கட்டுமான நிறுவன அலுவலகத்தின் பூட்டை உடைத்து, ஏழு லட்சம் ரூபாய் திருடி போலீசாருக்கு 'தண்ணி' காட்டி வந்த இருவர், ஏழு ஆண்டுகளுக்குபின் சிக்கினர்.
மதுரவாயலைச் சேர்ந்தவர் இளவரசன், 38. இவர், கட்டுமான தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இதன் அலுவலகம் வானகரம், போரூர் கார்டன் பகுதியில் உள்ளது.
கடந்த 2018 மார்ச் 17ம் தேதி அலுவலகத்தை பூட்டி சென்றார். இருநாட்கள் கழித்து, 19ம் தேதி வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு, ஏழு லட்சம் ரூபாய் மற்றும் கல்லுாரி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தன.
இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரித்தனர்.
ஆனால், திருடர்கள் குறித்த எந்த துப்பும் கிடைக்காமல், கடந்த ஏழு ஆண்டுகளாக போலீசார் திணறி வந்தனர். திருட்டு நடந்தபோது சேகரிக்கப்பட்ட கைரேகைகள், மாநில குற்ற ஆவண காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், கடந்த 2023ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் திருட்டு வழக்கில் சிக்கிய, அம்மாவட்டம் வேடந்தவாடியைச் சேர்ந்த நடராஜன், 28, என்பவரின் கைரேகையுடன் ஒத்துப்போனது.
இது குறித்து, கடந்த 2024ல் டி.ஜி.பி., அலுவலகத்திற்கு மாநில குற்ற ஆவண காப்பகம் தகவல் தெரிவித்தது.
அங்கிருந்து, மதுரவாயல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவண்ணாமலை சென்ற போலீசார், நடராஜனை கைது செய்தனர்.
அவர் அளித்த தகவலின்படி, அவரது கூட்டாளியான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ஹமீது, 41, என்பவரையும் கைது செய்தனர்.