/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதைபொருள் வழக்கில் மேலும் இருவர் கைது
/
போதைபொருள் வழக்கில் மேலும் இருவர் கைது
ADDED : மே 23, 2025 12:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் கடந்த, 2ம் தேதி, நுங்கம்பாக்கம் டி.பி.ஐ., வளாகம் எதிரே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த, ஸ்ரீஜித், ஹரிகிருஷ்ணன், பெருமாள், ஹரிகிருஷ்ணன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, 10 கிராம் மெத் ஆம்பெட்டமைன், 4 மொபைல் போன்கள், 1 மடிக்கணிணி, 6,000 ரூபாய், 12 சிரஞ்சிகள், 'டியோ' இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
கைதானவர்கள் கொடுத்த தகவலின்படி, தலைமறைவாக இருந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சுனீஷ், 32, நிகில், 32 ஆகிய இருவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.