UPDATED : ஜூலை 23, 2026 10:07 PM
ADDED : ஜூலை 23, 2026 10:04 PM
சென்னை:தனியார் பள்ளிகளுக்கு தடையின்மை சான்று, நிரந்தர அங்கீகாரம் பெற்று தருவதாகக் கூறி, 150 கோடிக்கு மேல் பணமோசடி செய்யப்பட்ட வழக்கில், தி.மு.க., செய்தித் தொடர்பு குழு துணை தலைவர் அரசுகுமார் கைது செய்யப்பட்டார்.
கடந்த, 13ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்படி, குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
அவரது தொடர்பில் இருந்த, 61 பேரின் வங்கி கணக்குகள் கண்டறியப்பட்டு, முடக்கம் செய்யப்பட்டன.
இவ்வழக்கு சம்பந்தமாக பாதிக்கப்பட்ட, 120 தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் உட்பட, 190 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்யும், நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் அரசுகுமாருக்கு, பணபரிமாற்றத்தில் உடந்தையாக இருந்த அவரது உறவினர்களான மதுரையைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், 39, திருச்சியைச் சேர்ந்த சுரேஷ், 49 ஆகிய இருவரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
