/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எஸ்.எஸ்.ஐ., கொலையில் மேலும் இருவர் கைது
/
எஸ்.எஸ்.ஐ., கொலையில் மேலும் இருவர் கைது
ADDED : ஆக 03, 2025 12:18 AM

சென்னைஆவடி அடுத்த அண்ணனுார் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராமன், 54. சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படையில் சிறப்பு எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தார்.
கடந்த, 18ம் தேதி, எழும்பூரில் மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது, வட்டிக்கு பணம் தரும் நீலாங்கரையைச் சேர்ந்த ராகேஷ், 30, தன் ஆட்களுடன், அவ்வழியே சென்றார்.
இதை பார்த்த சிறப்பு எஸ்.ஐ., ராஜாராமன், 'நான் கடனாக பணம் கேட்டால் இல்லை எனக்கூறி மற்றவர்களுக்கு தருகிறாயா' என கேட்டு தகராறில் ஈடுபட்டார்.
அப்போது, இருவருக்கும் கைகலப்பானதால் ஆத்திரமடைந்த, ராகேஷ் மற்றும் அவரது ஆட்கள் மூன்று பேர் சேர்ந்து, ராஜாராமனை அடித்து கீழே தள்ளினர்.
இதில், தலையில் பலத்த காயமடைந்த சிறப்பு எஸ்.ஐ., கடந்த மாதம் 26ம் தேதி, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிந்த எழும்பூர் போலீசார், ராகேஷ், அவரது ஆட்கள் சரத்குமார், 36, ஆகிய இருவரையும் கைது செய்ததுடன், அவர்களுக்கு தலைமறைவாக அடைக்கலம் தந்த நவோதித், 26, என்பவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அரும்பாக்கத்தைச் சேர்ந்த மணிவண்ணன், 42, செம்பியத்தைச் சேர்ந்த முருகேசன், 57, ஆகிய இருவரையும், போலீசார் நேற்று கைது செய்தனர்.