/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அலையில் சிக்கி மாயமான மேலும் இருவர் உயிரிழப்பு
/
அலையில் சிக்கி மாயமான மேலும் இருவர் உயிரிழப்பு
ADDED : ஜன 29, 2024 01:30 AM

திருவொற்றியூர்:வியாசர்பாடி, முத்து தெருவைச் சேர்ந்தவர் விஜய், 15; பிளஸ் 1 மாணவர். இவரது நண்பர்களான, பிளஸ் 2 மாணவர் சந்தோஷ், 16, ஷாம், 16, புவனேஷ், 15.
நால்வரும், நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில், திருவொற்றியூர், சுதந்திரபுரம் கடற்கரை பகுதியில் குளிக்கும்போது, ராட்சத அலையில் சிக்கினர்.
இதில், விஜய் என்ற சிறுவனை மீனவர்கள் காப்பாற்றினர். அலையில் சிக்கி மாயமான மற்ற மூவரையும், தீயணைப்பு வீரர்கள், மெரினா கடற்கரை நீச்சல் வீரர்கள், உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் தேடும் பணியில் திருவொற்றியூர் போலீசார் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் இரவு சந்தோஷின் உடல் மீட்கப்பட்டது. இருள் சூழ்ந்ததால் தேடும் பணி நிறுத்தப்பட்டு, நேற்று காலை மீண்டும் துவக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மதியம் ஷாம் உடல் சுங்கச்சாவடி கடற்கரை பகுதியிலும், மாலையில் புவனேஷின் உடல் காசிமேடு மீன்பிடி கடற்கரையிலும் கரை ஒதுங்கியது.
மாணவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, போலீசார் விசாரிக்கின்றனர்.