ADDED : ஜன 07, 2025 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஊராட்சி, நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஷியாம்குமார், 20. இவர், அம்பத்துாரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.
நேற்று பணி முடிந்து இரவு 8:00 மணியளவில், 'பஜாஜ் பல்சர்' பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திருவாலங்காடு ---- தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில், சின்னம்மாபேட்டை அடுத்த புலவநல்லுார் ஏரி அருகே வந்தபோது, இருசக்கர வாகனம் நிலை தடுமாறி, சாலையில் நடந்து சென்ற கடலுார் மாவட்டம், எஸ்.கே., புரத்தைச் சேர்ந்த குமார், 47, மீது மோதியது.
இதில், சம்பவ இடத்திலேயே ஷியாம்குமார் மற்றும் குமார் இருவரும் பலியாகினர். விபத்து குறித்து, திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

