ADDED : ஜன 17, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீலாங்கரை, வேளச்சேரி, நேரு நகரை சேர்ந்தவர்கள் வருண்குமார், 28, மகேஷ், 20, ரவி, 23. நேற்றுமுன்தினம், நண்பர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து, இ.சி.ஆர்., ஈஞ்சம்பாக்கம் கடலுக்கு குளிக்க சென்றனர். கடலில் குளித்து கொண்டிருந்தபோது, மூன்று பேரும் அலையில் சிக்கி, கடலில் இழுத்து செல்லப்பட்டனர்.
இதில், வருண்குமார், மகேஷ் ஆகியோர் நீரில் மூழ்கி பலியாகினர். மீனவர்களால் ரவி மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நீலாங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

