/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீஸ்காரர் உட்பட இருவர் நாய் குறுக்கிட்டதால் படுகாயம்
/
போலீஸ்காரர் உட்பட இருவர் நாய் குறுக்கிட்டதால் படுகாயம்
போலீஸ்காரர் உட்பட இருவர் நாய் குறுக்கிட்டதால் படுகாயம்
போலீஸ்காரர் உட்பட இருவர் நாய் குறுக்கிட்டதால் படுகாயம்
ADDED : நவ 10, 2024 12:29 AM
சென்னை, தேனாம்பேட்டையில், இருசக்கர வாகனத்தின் குறுக்கே நாய் வந்ததால் விபத்து ஏற்பட்டு, படுகாயமடைந்த போலீஸ்காரர் உட்பட இருவர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தாம்பரம், முடிச்சூர் சாலை ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 32. அவர் பேசின் பாலம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.
இருசக்கர வாகனத்தில் தன் தம்பி கிருஷ்ணன், 28 என்பவருடன், அண்ணாசாலை வழியாக நேற்று அதிகாலை, சென்று கொண்டிருந்தார். தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் அருகே சென்றபோது, திடீரென நாய் ஒன்று குறுக்கே ஓடியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் படுகாயமடைந்தனர்.
இருவரும் மீட்கப்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.