/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லாரி ஓனர் தற்கொலை வழக்கில் சித்தர் உட்பட இருவர் கைது
/
லாரி ஓனர் தற்கொலை வழக்கில் சித்தர் உட்பட இருவர் கைது
லாரி ஓனர் தற்கொலை வழக்கில் சித்தர் உட்பட இருவர் கைது
லாரி ஓனர் தற்கொலை வழக்கில் சித்தர் உட்பட இருவர் கைது
ADDED : ஏப் 23, 2025 12:36 AM
மணலி புதுநகர்,
மணலிபுதுநகரைச் சேர்ந்தவர் ராஜேஷ், 35; லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி வந்தார். கடந்த 15ம் தேதி, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன், தன் இறப்புக்கு சித்தர் ஹரி, அவரது நண்பர்களான பாலாஜி, முருகேசன், கிருஷ்ணன் ஆகியோர் தான் காரணம் என, கடிதம் எழுதி வைத்தார்.
இதுகுறித்து விசாரித்த மணலி புதுநகர் போலீசார், பாலாஜி, 47, முருகேசன், 46, ஆகிய இருவரை, நேற்று கைது செய்தனர்; மற்ற இருவர்களை தேடுகின்றனர்.
ராஜேஷ் தற்கொலை குறித்து, போலீசார் கூறியதாவது:
ராஜேஷும், மணலியைச் சேர்ந்த மெக்கானிக் பாலாஜியும் நண்பர்கள். பாலாஜி, திருவண்ணாமலையைச் சேர்ந்த ஹரி, 40, என்பவரை அறிமுகப்படுத்தி உள்ளார். அவரை சித்தர் என கூறியுள்ளார்.
அப்போது ஹரி, கூடுதலாக லாரி வாங்கி இயக்கினால் தொழில் மேம்படும் என கூறியுள்ளார். இதை நம்பிய ராஜேஷ், லட்சக்கணக்கில் கடன் வாங்கி, தன் பெயரில் நான்கு லாரிகளும், ஹரியின் பெயரில் ஒரு லாரியும் வாங்கியுள்ளார்.
அவற்றை வாடகைக்கு விட்டும் எதிர்பார்த்த பணம் வரவில்லை. இதனால், தன் பெயரில் இருந்த நான்கு லாரிகளை விற்றும் கடன் பிரச்னை தீரவில்லை.
தவிர, பாலாஜி, ஹரியின் நண்பர்களான முருகேசன், கிருஷ்ணன் ஆகியோரும் அவ்வப்போது பணம் கேட்டு தொந்தரவு தந்துள்ளனர். இதனால், ஹரி பெயரில் இருந்த லாரியை விற்க சொன்னபோது, அவர் மறுத்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த ராஜேஷ், தற்கொலை செய்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.