/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தை உட்பட இருவர் கைது
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தை உட்பட இருவர் கைது
ADDED : நவ 23, 2024 12:30 AM
திருவொற்றியூர்,
சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட, தந்தை உட்பட இருவரை போலீசார், 'போக்சோ'வில் கைது செய்தனர்.
புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த, 30 வயது பெண்ணுக்கு, திருவொற்றியூரைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ், 35, என்பவருடன் திருமணமாகி, இரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, ஆறு ஆண்டுகளுக்கு முன், தம்பதி பிரிந்து விட்டனர். அதில், இரண்டாவது மகளான, 13 வயது சிறுமி, தன் விருப்பத்தின்பேரில், தந்தையுடன் சென்று விட்டார்.
தந்தை, பாட்டியுடன் தங்கிய சிறுமி, 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன், பிரிந்துசென்ற தாயை பார்க்க ஆசைப்பட்டதால், புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு, சிறுமி அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, தந்தை ஸ்டீபன் ராஜ், 35, சிறுமியின் பெரியப்பா மகன் தீலிப், 19, ஆகியோர் மீது, சிறுமியின் தாய், திருவொற்றியூர் மகளிர் போலீசில் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், ஸ்டீபன் ராஜ், தீலிப் ஆகியோரை நேற்று, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.