/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை பொருள் விற்பனை போலீசார் இருவர் கைது
/
போதை பொருள் விற்பனை போலீசார் இருவர் கைது
ADDED : டிச 04, 2024 12:49 AM

சென்னை,
சென்னை, வடபழனி காவல் நிலைய போலீசார், கடந்த 28ம் தேதி 'மெத் ஆம்பெட்டமைன்' என்ற போதை பொருள் விற்பனை செய்த, கொளத்துாரைச் சேர்ந்த சுரேந்திரநாத், 37, அசோக் நகர் காவல் நிலைய போலீஸ்காரர் ஜேம்ஸ், 35, ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில், சென்னையில் மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றும் போலீஸ்காரர்களான ஆனந்தன், சமீர் ஆகியோருக்கு, இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
விருகம்பாக்கம், நாராயணசாமி தெருவில் உள்ள ஆனந்தன் வீட்டிலும், ஆயிரம்விளக்கு காவல் குடியிருப்பில் உள்ள சமீர் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
அவர்களது வங்கி கணக்கில், அதிகளவில் பண பரிவர்த்தனை நடந்துள்ளதும் தெரியவந்தது. ஆனந்தன் சில ஆண்டுகளுக்கு முன் வேலை வேண்டாம் எனக் கூறி, பெங்களூரு சென்றுஉள்ளார். அப்போது, நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, 'மெத் ஆம்பெட்டமைன்' போதை பொருள் பயன்படுத்தி வந்துள்ளார்.
அதை, சென்னையில் விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்பதை தெரிந்து, பெங்களூருவில் இருந்து மெத் ஆம்பெட்டமைன் வாங்கி, போலீஸ்காரர் ஜேம்ஸிடம் கொடுத்துள்ளனர். ஜேம்சும், சுரேந்திரநாத்தும் மொபைல் போன் செயலி வாயிலாக, அதை விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.