/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆவடி அருகே இரு ரவுடிகளை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை
/
ஆவடி அருகே இரு ரவுடிகளை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை
ADDED : ஜன 19, 2025 12:21 AM

ஆவடி, ஆவடி அடுத்த பட்டாபிராம், ஆயில்சேரி, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரெட்டைமலை சீனிவாசன், 27; அவரது தம்பி ஸ்டாலின், 24.
ரவுடிகளான இருவர் மீதும், பட்டாபிராம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சகோதரர்கள், நேற்று இரவு, வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது, வீட்டிற்குள் திடீரென நுழைந்த மூன்று பேர் கும்பல், அவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது. அவர்களிடம் இருந்து தப்பியோடிய இருவரையும், அந்த கும்பல் ஓட ஓட விரட்டியது.
இதில் தடுமாறி விழுந்த ஸ்டாலினின் தலை, கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில், கத்தி மற்றும் அரிவாளால் அந்த கும்பல் வெட்டியது. ரத்த வெள்ளத்தில், அதே இடத்தில் ஸ்டாலின் உயிரிழந்தார்.
அங்கிருந்து தப்ப முயன்ற ரெட்டைமலை சீனிவாசனையும் விரட்டி சென்ற அக்கும்பல், தனலட்சுமி மாந்தோப்பில் உள்ள புதரில் வைத்து, சரமாரியாக வெட்டி, அவரையும் கொலை செய்தது.
தகவலறிந்து சென்ற பட்டாபிராம் போலீசார், இருவரது உடலையும் கைப்பற்றினர். வழக்கு பதிந்து போலீசார் நடத்திய விசாரணையில், நேற்று மாலை, ஆயில்சேரி பிரதான சாலையில் நடந்து சென்ற மூன்று பேரை, ரெட்டைமலை சீனிவாசனும், ஸ்டாலினும் வழிமறித்து, தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனால் ஆத்திரமடைந்த மூவரும், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து வந்து இருவரையும் கொலை செய்து தப்பியது தெரியவந்தது. போலீசார், தனிப்படை அமைத்து, மூவரையும் தேடுகின்றனர்.

