/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.40 லட்சம் மதிப்பு வீடு அபகரிப்பு இருவருக்கு இரண்டாண்டு சிறை
/
ரூ.40 லட்சம் மதிப்பு வீடு அபகரிப்பு இருவருக்கு இரண்டாண்டு சிறை
ரூ.40 லட்சம் மதிப்பு வீடு அபகரிப்பு இருவருக்கு இரண்டாண்டு சிறை
ரூ.40 லட்சம் மதிப்பு வீடு அபகரிப்பு இருவருக்கு இரண்டாண்டு சிறை
ADDED : ஏப் 24, 2025 12:22 AM
சென்னை, சென்னை மண்ணடி நாராயண சாரங்க தோட்டத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவரது மனைவி ஸ்ரீகிருபா. இவர்கள் ஓமன் நாட்டில், மஸ்கட்டில் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு, மண்ணடியில், 40 லட்சம் ரூபாய் மதிப்பில், 600 சதுர அடியில் வீடு உள்ளது. இதற்கான பொது அதிகார பத்திரத்தை, சையது முகமது என்பவருக்கு கொடுத்து இருந்தனர்.
இவர்களுக்கு தெரியாமல், சென்னையைச் சேர்ந்த பாளையம், சுரேஷ் ஆகியோர் போலி ஆவணம் வாயிலாக, அந்த வீட்டை அபகரித்து உள்ளனர்.
இதுகுறித்த புகாரில், மத்திய குற்றப் பிரிவு, நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார், பாளையம், சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த மோசடி தொடர்பான வழக்கு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தகுந்த சாட்சிகளுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், பாளையம், சுரேஷ் ஆகியோருக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 28,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
*