/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கார் ஓட்டுநரிடம் பணம் பறித்த திருநங்கையர் இருவர் கைது
/
கார் ஓட்டுநரிடம் பணம் பறித்த திருநங்கையர் இருவர் கைது
கார் ஓட்டுநரிடம் பணம் பறித்த திருநங்கையர் இருவர் கைது
கார் ஓட்டுநரிடம் பணம் பறித்த திருநங்கையர் இருவர் கைது
ADDED : டிச 23, 2025 05:03 AM
வானகரம்: வானகரத்தில், கார் ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்த திருநங்கையர் இருவர் கைது செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெகன், 30; ஐ.டி., நிறுவன கார் ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் இரவு ஊழியர்களை ஏற்றிக்கொண்டு, அம்பத்துார் அடுத்த அயப்பாக்கத்தில் இறக்கி, தாம்பரம் -- மதுரவாயல் பைபாசில் செங்கல்பட்டு நோக்கி சென்றார். மதுரவாயல் அடுத்த வானகரம் அருகே சாலையோரம் காரை நிறுத்தி, அங்கு நின்ற திருநங்கையருடன் பேசியுள்ளார்.
அப்போது உல்லாசம் அனுபவிப்பதற்காக, 500 ரூபாயை திருநங்கையர் கூறிய மொபைல் போன் பணப்பரிமாற்ற செயலியான 'ஜிபே'வில் அனுப்பியுள்ளார். அங்கிருந்த திருநங்கையர், ஜெகனின் மொபைல் போனை வாங்கி போட்டோ எடுப்பதாக கூறி, 'ஜிபே'யில் இருந்து 11,000 ரூபாயை தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றி, ஜெகனை மிரட்டி தப்பி சென்றனர்.
இது குறித்து விசாரித்த வானகரம் போலீசார், கோயம்பேடைச் சேர்ந்த கயல், 28, அனுஷ்கா, 28, ஆகிய திருநங்கையரை கைது செய்தனர்.

