/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மனைவியின் உறவினரால் தாக்கப்பட்ட வாலிபர் தற்கொலை
/
மனைவியின் உறவினரால் தாக்கப்பட்ட வாலிபர் தற்கொலை
ADDED : டிச 23, 2025 05:03 AM
எம்.கே.பி.நகர்: மனைவியின் உறவினரால் தாக்கப்பட்ட வாலிபர், அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.
வியாசர்பாடி, சர்மா நகரைச் சேர்ந்தவர் ஜெகன்நாத், 33; டெலிவரி ஊழியர். இவரது மனைவி மோனிகா. இவர்களுக்கு ஜெயஸ்ரீ, 5, என்ற ஒரு மகள் உள்ளார்.
மூன்று நாட்களுக்கு முன், தம்பதிக்குள் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக, அருகில் உள்ள தாய் வீட்டிற்கு மனைவி சென்றுள்ளார். இந்த நிலையில், ஜெகன்நாத் மனைவியை பார்க்க மாமியார் வீட்டிற்கு சென்ற நிலையில், மோனிகாவின் உறவினரான சதீஷ் என்பவர் ஜெகன்நாத்தை தாக்கி உள்ளார்.
இதனால், அவமானம் தாங்க முடியாமல் ஜெகன்நாத், மனைவியிடம் மொபைல் போனில் தொடர்புகொண்டு, தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து எம்.கே.பி., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

