/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு புகுந்து நகை திருட்டு உ.பி., நபர்கள் இருவர் கைது
/
வீடு புகுந்து நகை திருட்டு உ.பி., நபர்கள் இருவர் கைது
வீடு புகுந்து நகை திருட்டு உ.பி., நபர்கள் இருவர் கைது
வீடு புகுந்து நகை திருட்டு உ.பி., நபர்கள் இருவர் கைது
ADDED : அக் 05, 2025 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை, புஜகரா தெருவை சேர்ந்தவர் தியாகராஜன், 60. கடந்த மாதம் 8ம் தேதி, இவர் வீட்டில் புகுந்த இரண்டு பேர், 32 சவரன் நகையை திருடி சென்றனர்.
புகாரின்படி,சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து விசாரித்தனர். இதில், உத்தர பிரதேசம் மாநிலம், சிக்கம்மர் பகுதியை சேர்ந்த சன்முகம்மது, 35, நுார்முகமது, 38, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டதும், திருடிய நகைகளை விற்று சொகுசாக வாழ்ந்து வந்ததும் தெரிந்தது.
நேற்று, அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நகையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.