/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஏரியாவில் யார் பெரிய தாதா' ரவுடியை கொன்ற மூவர் கைது
/
'ஏரியாவில் யார் பெரிய தாதா' ரவுடியை கொன்ற மூவர் கைது
'ஏரியாவில் யார் பெரிய தாதா' ரவுடியை கொன்ற மூவர் கைது
'ஏரியாவில் யார் பெரிய தாதா' ரவுடியை கொன்ற மூவர் கைது
ADDED : அக் 05, 2025 02:23 AM

புதுவண்ணாரப்பேட்டை,
'ஏரியாவில் யார் பெரிய தாதா' என்ற போட்டியில் ஏற்பட்ட தகராறில், ரவுடியை அடித்து கொன்ற மூவரை, போலீசார் கைது செய்தனர்.
புதுவண்ணாரப்பேட்டை, வெங்கடேசா தெருவை சேர்ந்தவர் மனோஜ்குமார், 20. சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது, புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில், 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், புதுவண்ணாரப்பேட்டை, வீரராகவன் தெருவில் உள்ள காலி இடத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு நண்பர்கள் மூவருடன் சேர்ந்து மனோஜ்குமார் மது குடித்தார்.
அப்போது, 'ஏரியாவில் யார் பெரிய தாதா' என பேசிக்கொண்டிருந்த போது, அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த நண்பர்கள் மூவரும், மது பாட்டிலால் மனோஜ்குமாரை தாக்கினர்.
இதில் படுகாயமடைந்த மனோஜ்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த மனோஜ்குமார், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளான புதுவண்ணாரப்பேட்டை, வெங்கடேசன் தெருவை சேர்ந்த சஞ்சய், 22, பாரதியார் நகரை சேர்ந்த பிரகாஷ், 22, தனபால் நகரை சேர்ந்த தேவபிரசாத், 23, ஆகிய மூவரை கைது செய்தனர்.