/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரசு பஸ் - வேன் மோதல் இரண்டு பெண்கள் பலி
/
அரசு பஸ் - வேன் மோதல் இரண்டு பெண்கள் பலி
ADDED : டிச 02, 2025 04:20 AM

புதுப்பட்டினம்: கல்பாக்கம் அருகே, அரசுப் பேருந்தும், தனியார் நிறுவன வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இரண்டு பெண்கள் பலியாகினர்; 15 பேர் காயமடைந்தனர்.
கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள தனியார் 'எக்ஸ்போர்ட்' நிறுவனத்திற்கு, நேற்று காலை, ஊழியர்கள் 20 பேரை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று சென்றது.
காலை 5:30 மணியளவில், கல்பாக்கம் அடுத்த குன்னத்துாரை கடந்த போது, புதுச்சேரி சென்ற அரசுப் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில், கூவத்துார் அடுத்த கீழார்கொல்லை பகுதியைச் சேர்ந்த பானுமதி, 40, உமா, 35, ஆகியோர், சம்பவ இடத்திலேயே பலியாகினர்; 15 பேர் காயமடைந்தனர்.
வேன் மற்றும் பேருந்தின் முகப்பு பகுதி நொறுங்கியது.
தகவலறிந்த சதுரங்கப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இறந்த இரு பெண்களின் உடல்களை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
காயமடைந்தவர்களை மீட்டு, மணமை தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, மாமல்லபுரம் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் சேர்த்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், வேன் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

