/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒரே நாளில் 4 குற்றச்சம்பவம் இளைஞர்கள் இருவர் சிக்கினர்
/
ஒரே நாளில் 4 குற்றச்சம்பவம் இளைஞர்கள் இருவர் சிக்கினர்
ஒரே நாளில் 4 குற்றச்சம்பவம் இளைஞர்கள் இருவர் சிக்கினர்
ஒரே நாளில் 4 குற்றச்சம்பவம் இளைஞர்கள் இருவர் சிக்கினர்
ADDED : ஜன 08, 2025 08:08 PM
பெரம்பூர்,:பெரம்பூர், எஸ்.எஸ்.வி., கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமாரி, 48. இவரது உறவினரான லலித்குமாரி புதுச்சேரி சென்றதால், தன் வீட்டருகே உள்ள லலித்குமாரியின் வீட்டை செல்வகுமாரி பாதுகாத்து வந்தார்.
கடந்த 6ம் தேதி லலித்குமாரி வீட்டை பூட்டி சென்ற நிலையில், மறுநாள் வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் இருந்த 1,000 ரூபாய் சில்லரை காசுகள், பூஜை சாமான்கள் காணாமல் போயிருந்தது. இது குறித்து செம்பியம் போலீசார் விசாரித்தனர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்து விசாரித்ததில், வீடு புகுந்து திருடியது எண்ணுாரைச் சேர்ந்த ஸ்டீபன், 21, மற்றும் மயிலாப்பூரைச் சேர்ந்த நரேன்ராஜ் என்கிற ஜோசப், 19, என்பது தெரியவந்தது. இருவரும் சேர்ந்து மயிலாப்பூரில் இரண்டு பைக்குகளையும் திருடியுள்ளனர்.
மேலும் நேற்று முன்தினம் செம்பியம், ரமணா தெருவில் உள்ள கோவிலில் நுழைந்து சில்லரை காசுகள் மற்றும் நடந்து சென்றவரின் மொபைல் போனை பறித்ததும், இவர்களே என்பது உறுதியானது. இதையடுத்து, இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து இரண்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரையும், போலீசார் நேற்று சிறையில் அடைத்தனர்.

