/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நேருக்கு நேர் மோதிய பைக்குகள் இரு வாலிபர்கள் பலி; இருவர் 'சீரியஸ்'
/
நேருக்கு நேர் மோதிய பைக்குகள் இரு வாலிபர்கள் பலி; இருவர் 'சீரியஸ்'
நேருக்கு நேர் மோதிய பைக்குகள் இரு வாலிபர்கள் பலி; இருவர் 'சீரியஸ்'
நேருக்கு நேர் மோதிய பைக்குகள் இரு வாலிபர்கள் பலி; இருவர் 'சீரியஸ்'
ADDED : செப் 08, 2025 06:18 AM
திருத்தணி: பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த இருவர், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திராவைச் சேர்ந்தவர் தினேஷ், 27; தனியார் நிறுவன ஊழியர். இவர், திருத்தணி அடுத்த மங்காபுரம் காலனியைச் சேர்ந்த எழிலரசி, 24, என்பவரை திருமணம் செய்து, அங்கேயே வசித்து வருகிறார்.
நேற்று இரவு 7:30 மணிக்கு தினேஷ், மங்காபுரம் காலனியைச் சேர்ந்த ஆகாஷ், 21, என்பவருடன், 'ஹீரோ பேஷன் புரோ' பைக்கில், மத்துார் ரயில்வே கேட் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.
மத்துார் தனியார் பைப் கம்பெனி அருகே சென்றபோது, எதிரே வந்த மத்துார் பெரியார் நகரைச் சேர்ந்த கோவிந்தன், 27, என்பவரது 'ஹீரோ பேஷன் புரோ' பைக், நேருக்கு நேராக மோதியது.
இதில், தினேஷ், கோவிந்தன் ஆகியோர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆகாஷ், 21, மற்றும் சாலையோரம் நடந்து சென்ற தடுக்குப்பேட்டையைச் சேர்ந்த முனிரத்தினம், 66, ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இருவரும் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.