sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ரூ.152 கோடியில் 852 வீடுகள் திறந்து வைத்தார் உதயநிதி

/

 ரூ.152 கோடியில் 852 வீடுகள் திறந்து வைத்தார் உதயநிதி

 ரூ.152 கோடியில் 852 வீடுகள் திறந்து வைத்தார் உதயநிதி

 ரூ.152 கோடியில் 852 வீடுகள் திறந்து வைத்தார் உதயநிதி


ADDED : மார் 01, 2026 05:43 AM

Google News

ADDED : மார் 01, 2026 05:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட இடங்களில், 152.45 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, 852 குடியிருப்புகளை, துணை முதல்வர் உதயநிதி நேற்று திறந்து வைத்தார்.

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட கொய்யாதோப்பு திட்ட பகுதியில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 1973 - 79ம் ஆண்டு காலத்தில் கட்டப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்புகள் சேதமடைந்தன.

அவை அகற்றப்பட்டு, கொய்யாதோப்பில், 324; காக்ஸ் குடியிருப்பில், 78; சிந்தாதிரிப்பேட்டையில், 450 வீடுகள் என, 152.45 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள, 852 குடியிருப்புகளை நேற்று, துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். அவர், பயனாளிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அமைச்சர் அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதேபோல், மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், அரசு கஸ்துாரிபா காந்தி தாய் - சேய் நல மருத்துவமனை வளாகத்தில், 32.32 கோடி ரூபாய் மதிப்பிலான, 100 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கூடுதல் தளத்தையும் உதயநிதி நேற்று திறந்து வைத்தார்.






      Dinamalar
      Follow us