/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மேடவாக்கம் ரவி உருவப்படம் திறந்து வைத்தார் உதயநிதி
/
மேடவாக்கம் ரவி உருவப்படம் திறந்து வைத்தார் உதயநிதி
மேடவாக்கம் ரவி உருவப்படம் திறந்து வைத்தார் உதயநிதி
மேடவாக்கம் ரவி உருவப்படம் திறந்து வைத்தார் உதயநிதி
ADDED : நவ 05, 2025 02:49 AM

மேடவாக்கம்: மேடவாக்கம் ஊராட்சி தலைவரும், தலைமை பொதுக்குழு உறுப்பினருமான மேடவாக்கம் ரவி, கடந்த மாதம் 22ம் தேதி, உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இந்நிலையில், நேற்று மா லை நடந்த நினை வேந்தல் நிகழ்வில், துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று, அவரின் உருவப்படத்தை திறந்து வைத்தார்.
அதன்பின் உதயநிதி பேசியதாவது:
தன் 20 வயதில் கழகத்தில் இணைத்து க் கொண்ட ரவி, தொடர்ந்து மூன்று முறை மேடவாக்கம் ஊராட்சி தலைவராகவும், ஆறு முறை ஒன்றிய குழு உறுப்பினராகவும் இருந்து, சோழிங்கநல்லுார் தொகுதியில், கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்.
அவரின் மறைவு கட்சிக்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பின், 3,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்தார். இதில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன், சோழிங்கநல்லுார் எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் உட்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

