/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உதயநிதி பிறந்தநாள் விழா பம்மலில் கொண்டாட்டம்
/
உதயநிதி பிறந்தநாள் விழா பம்மலில் கொண்டாட்டம்
ADDED : நவ 28, 2025 05:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பம்மல்: பல்லாவரத்தை அடுத்த பம்மல் தெற்கு பகுதி தி.மு.க., இளைஞரணி சார்பில், பம்மல் இரட்டை பிள்ளையார் கோவில் அருகில், பகுதி தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் அமிர்தராஜ் தலைமையில், தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், பம்மல் தெற்கு பகுதி செயலரும், தாம்பரம் மாநகராட்சி, 1வது மண்டலக்குழு தலைவருமான வே.கருணாநிதி பங்கேற்று, கட்சி கொடியேற்றி, பொதுமக்கள், கட்சி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சதீஷ், ஆகாஷ், இன்பராஜ், பிரசாத், கவுதம் ராஜசேகர், ராகேஷ் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

