/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கார் டிரைவரை தாக்கினாரா தி.மு.க., மண்டல குழு தலைவர்?
/
கார் டிரைவரை தாக்கினாரா தி.மு.க., மண்டல குழு தலைவர்?
கார் டிரைவரை தாக்கினாரா தி.மு.க., மண்டல குழு தலைவர்?
கார் டிரைவரை தாக்கினாரா தி.மு.க., மண்டல குழு தலைவர்?
ADDED : நவ 28, 2025 05:22 AM

கொளத்துார்: தி.மு.க., மண்டல குழு தலைவர், தன் கணவருடன் தன்னை தாக்கியதாக, கார் ஓட்டுநர் ஒருவர் வீடியோ பதிவு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
அதேநேரம், கார் ஓட்டுநர் தான் மண்டல குழு தலைவரை ஆபாசமாக பேசி, தாக்க முயன்றார் என, போலீசில் புகார் பதிவாகி உள்ளது.
கொளத்துார், ராம்நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் கார் ஓட்டுநர் ஏசுதாஸ், 37. இவர், தி.மு.க.,வினர் தன்னை தாக்கியதாக, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணை காட்சிகள் சமூக வலைதளங்களில் நேற்று வெளியானது. அதன் பின், போலீசாரிடம் ஏசுதாஸ் கூறியிருப்பதாவது:
கொளத்துார் அன்னை அஞ்சுகம் நகர் பகுதியில், நான் வேலை செய்யும் பாலகிருஷ்ணனின் உறவினருக்கு சொந்தமான காலி இடம் முன், மின்மாற்றி அமைக்க, ஊழியர்கள் பள்ளம் தோண்டினர். 'என் உறவினர் வீட்டின் முன் ஏன் பள்ளம் தோண்டுகிறீர்கள்; சற்று தள்ளி பள்ளம் போடுங்கள்' என, பாலகிருஷ்ணன் கேட்டார்.
அப்போது, திரு.வி.க., நகர் மண்டல குழு தலைவர் சரிதாவும், அவரது கணவரும் வந்து, பாலகிருஷ்ணனை தகாத வார்த்தைகளால் திட்டினர். இதை தட்டிக்கேட்டதால், என்னை சரமாரியாக தாக்கினர். ஆனால், நான்தான் அவர்களை அடிக்க பாய்ந்ததாக, பொய் புகார் கொடுத்துள்ளனர்.
இவ்வாறு ஏசுதாஸ், போலீசாரிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில், தி.மு.க., மண்டல குழு தலைவரின் ஆதரவாளரான ஜமுனா என்பர், 'சரிதாவை ஆபாசமாக திட்டியதோடு, தாக்க வந்தார்' என, பெரவள்ளூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து, மண்டல குழு தலைவர் சரிதாவின் கணவர் மகேஷ்குமாரை மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது, இதுகுறித்து பேச மறுத்துவிட்டார்.

