/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அனுமதியற்ற கட்டடம் இரண்டாம் முறை 'சீல்'
/
அனுமதியற்ற கட்டடம் இரண்டாம் முறை 'சீல்'
ADDED : அக் 19, 2024 12:28 AM
சென்னை, அண்ணா நகர் மண்டலம், கீழ்ப்பாக்கம், தியாகப்பா தெருவில், பாலகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான வீடு உள்ளது.
தரை மற்றும் முதல் தளம் உடைய இந்த பழைய கட்டடம் முறையான அனுமதியுடன் கட்டப்படவில்லை என, மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
இதையடுத்து, சில மாதங்களுக்கு முன், அண்ணா நகர் மண்டல அதிகாரிகள், 'நோட்டீஸ்' வழங்கி, கட்டடத்திற்கு 'சீல்' வைத்தனர். இது தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
மேல் முறையீடு உள்ளிட்ட காரணங்களால், சில மாதங்களுக்கு முன், 'சீல்' அகற்றப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவின்படியும், தமிழ்நாடு வீட்டு வசதி துறை அறிவுறுத்தல்படியும், கட்டடத்திற்கு கடந்த மாதம் மீண்டும் 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.
இந்நிலையில், பாலகிருஷ்ணன் வீட்டிற்கு, அண்ணா நகர் மண்டல மாநகராட்சி அதிகாரிகள் நேற்று, மீண்டும் இரண்டாவது முறையாக 'சீல்' வைக்க முயன்றனர். அப்போது, உரிமையாளர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார்.
வீட்டில் வசித்தவர்களை வெளியேற்றி, கட்டடத்திற்கு நேற்று, அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.