/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் அடையாளம் தெரியாத சடலங்கள் எரிப்பு
/
கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் அடையாளம் தெரியாத சடலங்கள் எரிப்பு
கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் அடையாளம் தெரியாத சடலங்கள் எரிப்பு
கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் அடையாளம் தெரியாத சடலங்கள் எரிப்பு
ADDED : மார் 07, 2024 12:34 AM

திருவல்லிக்கேணி, திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் அருகிலுள்ள வி.ஆர்.பிள்ளை தெருவில், கிருஷ்ணாம்பேட்டை சுடுகாடு உள்ளது.
சில நாட்களாகவே, மாலை நேரங்களில் கடும் துர்நாற்றம் வீசுவதால், அருகிலுள்ள அனுமந்தபுரம் பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
நேற்று முன்தினம், கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் இருந்து அதிக துர்நாற்றம் வீசியதால், பொதுமக்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர்.
அங்கு, குப்பையோடு குப்பையாக சடலம் ஒன்றை போட்டு எரித்துள்ளனர்.
தகன மேடை இருக்கும் நிலையில், மாலை நேரத்தில் அடையாளம் தெரியாத சடலத்தை, குப்பையில் போட்டு எரிக்க யார் அனுமதி கொடுத்தது என, மயான ஊழியரிடம் கேள்வி எழுப்பி உள்ளனர்.
பின், ஐஸ் ஹவுஸ் போலீசாருக்கு தகவல் அளிக்க, அவர்கள் வந்து, மயான ஊழியரிடம் விசாரித்தனர்.
இதுகுறித்து, அ.ம.மு.க., திருவல்லிக்கேணி பகுதி செயலர் தனம், 47, கூறியதாவது:
கிருஷ்ணாம்பேட்டை சுடுகாடில், மாலை நேரத்தில் அடையாளம் தெரியாத சடலங்களை எரிப்பதால், அனுமந்தபுரம் பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது.
நாங்கள் அங்கு சென்ற போது, பாதி எரிந்தபடி சடலம் ஒன்று இருந்தது. பின், போலீசில் புகார் அளித்தோம்.
எரிந்த சடலத்தை பரிசோதிக்க மருத்துவர்கள் மற்றும் போலீசார், நேற்று சுடுகாட்டிற்கு வந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, மயான ஊழியர் ஒருவர் கூறுகையில், 'சுடுகாட்டில் சடலங்களை புதைக்கும்போது, சரியான ஆழத்தில் புதைப்பதில்லை. இதனால், சடலங்களை நாய்கள் வெளியில் இழுத்துப் போட்டு விடுகின்றன.
இதனால் வேறு வழியில்லாமல், சுடுகாடு ஓரத்தில் வைத்து சடலங்களை எரிக்கும் நிலை ஏற்படுகிறது' என்றார்.

